Varam: A collection of 4 Novelettes (Paperback)

Varam: A collection of 4 Novelettes By Thiagalingam Ratnam Cover Image
$18.44
Not currently on our shelves, but available to order (usually within a few days)
This book cannot be returned.

Description


'வரம்' என்னும் இத்தொகுதியின் கதை கருணைக்கொலை ஒன்றினைப் பற்றிய சிந்தனையை, யதார்த்தச் சூழ்நிலையில் முன்வைக்கிறது. நோர்வேயில் சீக்கயெம் (நர்சிங்ஹோம்) ஒன்றில் சிக்கப்பிளையராக (தாதியாக) பணிபுரியும் வேணியின் பணிகளினூடாகத் தியாகலிங்கம் அதனை நமக்கு அறிமுகப்படுத்துகின்றார். கருணைக்கொலை எத்தகைய சாதுரியத்துடனும், அளவு கடந்த மாந்த நேசத்துடனும் கையாளப்படுதல் வேண்டும் என்பது மிக நுட்பமாக 'வரம்' என்கின்ற குறுநாவலில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. அது தனிப்பட்ட மனித அவலம் பற்றியது. ஆயிரக்கணக்கானோர் கருணைக் கொலை செய்யப்படும், இந்தப் புதிய சாதனை பற்றி இனிப் பிறக்கும் ஓர் இலக்கியப்படைப்பாளிதான் எழுதமுடியும் என்று சமாதானம் அடைவோமாக. சென்ற ஆண்டில் தமது 'பரதேசி' என்னும் நாவலை அச்சிட்டெடுப்பதற்கு தியாகலிங்கம் சென்னை வந்திருந்தார். அப்பொழுது நான் தமிழ் ஈழக் குறுநாவல் தொகை ஒன்றின் தொகுப்புப் பணியினை மேற்பார்வை செய்து கொண்டிருந்தேன். அப்பொழுது 'நீங்கள் குறுநாவல் எழுதும் முயற்சியில் ஈடுபட்டதில்லையா?' என்று கேட்டேன். அவர் சிரித்தார். இயல்பாகவே அவர் அதிகம் பேசுவதில்லை. இலக்கியம் குறித்த கலந்துரையாடல்களிலே அவர் ஒதுக்கம் காட்டுபவராகவும் காணப்படுகின்றார். இந்த அமைதியையும் ஒதுக்கத்தையும் அவருடைய பலமாக அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டுமோ நான் அறியேன். 'பனிகொட்டும் இரவின் தனிமை தரும் வசதியைப் பயனுள்ளதாகப் பயன்படுத்துகிறேன். சின்னதும் பெரியதுமாகக் கதைகள் பலவற்றை என் கணினியில் எழுதி வைத்துள்ளேன். சிறுகதை, குறுநாவல், நாவல் என்று புனைவு இலக்கியத்தின் நீளத்தை வைத்து இலக்கணம் சொல்லும் வித்துவம் எனக்குத் தெரியாது. உங்கள் வாசிப்பிற்காக இரண்டினை அனுப்பி வைக்கிறேன். அதனைக் குறுநாவ


Product Details
ISBN: 9781471726569
ISBN-10: 1471726568
Publisher: Lulu.com
Publication Date: April 13th, 2022
Pages: 184
Language: Tamil